Monday, November 20, 2006

சிங்களம் மட்டும் மொழிச் சட்டம்.

சிங்களவர்களுடைய அரசியல் வரலாற்றில் 1956ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகக் கருதப்படுகின்றது. சிங்களத் தேசியம் அதனுடைய மொழி, பண்பாடு போன்றவை உரிய இடத்தைப் பெற்றதாகச் சிங்களவர்கள் கருதிக் கொள்ளுகின்றார்கள். ஒரு சமூக மாற்றம் நடைபெற்ற ஆண்டாக சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் 1956ம் ஆண்டைக் கணிக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் 1956ம் ஆண்டு ஒரு மிக மோசமான ஆண்டாகும். சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதோடு முதல் இனக் கலவரம் நடைபெற்ற ஆண்டும் 1956.இவற்றுக்குக் காரணமானது 1956ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலேயாகும். இத் தேர்தலிலே மக்கள் ஜக்கிய முன்னனி (M.E.P) என்றொரு பெயரில் பண்டாரநாயக்கா மூன்று கட்சிகள் கொண்ட கூட்டனி ஒன்றை உருவாக்கினார். அவருடைய S. L.F.P கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பிலிப் குணவர்த்தன உருவாக்கிய V.S.S.P. எனப்படும் கட்சி மூன்று கட்சியுமாகும். இம் முன்னனி ஐ.தே. க. விற்கு முற்றிலும் புறம்பான கொள்கைகளை, சிங்களத் தேசியத்தை, மொழி, புத்தமதத்தை, சாதாரண சிங்கள மக்களை முன்னேற்றப் போவதாக கூறிக் கொண்டது. முதல் தடவையாகப் பிக்குகள் முன்னனி ஒன்றை உருவாக்கியது. களனி ரஜ மகாவிகாரையின் தலைமைக்குருவான புத்தரகித்தர தேரோ என்பவர் தலைமையில் இம் முன்னனி அமைந்தது. சிங்களம் மட்டும் மொழிச்சட்டத்தை 24 மணித்தியாலத்திற்குள் பதவிக்கு வந்தால் கொண்டு வருவோம் என்று கூறியதன் மூலம் தேர்தலில் 39.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மொத்தம் 95 தொகுதிகளில் 51 தொகுதியைக் கைப்பற்றியது. படுதோல்வி கண்ட ஐ. தே. க. 27 வீதி வாக்குகளைப் பெற்ற பொழுதும் 8 இடங்களையே பெற்றது. அதே சமயம் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகக் கூறிய சமஷ்டிக் கட்சி 10 இடங்களைப் பெற்றது. தமிழ் காங்கிரசிற்கு 01 இடந்தான் கிடைத்தது.

பதவியேற்றவுடன் பண்டாரநாயக்கா 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம்திகதி சிங்களம் மட்டும் மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரித்தது. தொடக்கத்தில் நியாயமான அளவு தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு இம்மசோதாவில் இடமளிக்க பண்டாரநாயக்கா விரும்பிய பொழுதும் பிக்குகள் முன்னனி எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இச் சட்டம் கரையோரச் சிங்கள மக்கள் தங்கள் பொருண்மிய சீர் கேடுகளுக்கு தமிழர் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் அதிகம் இருக்கும் தமிழரே அடிப்படைக் காரணம் என்கின்ற இனவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். அன்றைய தினமே (5ம் திகதி ) செல்வநாயகம் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்தி பின்பற்றிய சாத்வீக (அகிம்சை) வழிகளில் நாடாளுமன்றத்திற்கு முன்னே களனி முகத்திடலில் 300 பேர் கொண்ட சத்தியாக்கிரகம் எனப்படும் அமைதி வழியிலான எதிர்ப்பில் ஈடுபட்டது. அன்றைய தினமே பிக்குகள் முன்னனி காலணி முகத்திடலுக்கு ஊர்வலமாக வந்து அங்கேயிருந்த தமிழ்த் தொண்டர்கள் மீது வன்முறைப் பிரயோகம் செய்தது. பலரைத் தாக்கி, சிலரைத் தூக்கி நாடாளுமன்றத்திற்கு அண்மையிலுள்ள பெய்ரா ஏரியில் போட்டனர். இவ்வளவு நடந்தபின்னும் சிங்களப் பொலீஸ்துறை பார்வையாளராக நின்றது

பெருங்கற்காலப் பண்பாடு

பெரிய கற்களை அமைத்து ஈமச் சின்னங்களை அமைத்ததால் இக் கலாச்சாரம் பெருங்கற்காலப் பண்பாடு எனப் பெயர் பெற்றது. ஆனால் கற்களால் அமைக்கப்படாத சவஅடக்கங்களும் தாழியடக்கங்களும் இப்பகுப்பில் அடங்கத்தவறவில்லை. காரணம் இவை யாவற்றுக்கும் இடையே இழைவிட்டோடும் பிற கலாச்சார அம்சங்களாகும். இவ் அம்சங்களிற் கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள், இரும்பாயுதங்கள்,பிற வெண்கலப் பொருட்கள், அணிகலன்கள்ஆகியன அடக்கினதும் இக்கலாச்சாரத்திற்குத் தனித்துவத்தினை அளிப்பனவாக மக்கள் குடியிருப்புக்கள், ஈமச்சின்னங்கள், குளங்கள், வயல்கள், ஆகியன விளங்குகின்றன. இத்தகைய ஓர் அமைப்பினையே தென்னிந்திய பெருங்கற்கால கலாச்சாரத்திலும் காண்பதால் அக்கலாச்சாரத்தின் படர்ச்சியே ஈழத்துப் பெருங்கற்காலம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது. இப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், அவர்கள் அமைத்த ஈமச்சின்னங்கள், சவ அடக்கங்கள்,வயல்கள்,குளங்கள், ஆகிய இந்த நான்கு அமச்சங்களும் இப்பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கின. இலங்கையில் வரலாற்று உதய காலம் கி.மு.1000 இற்கும் கி.மு. 300ற்கும் இடையில் நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் தோற்றம் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கின. வருகையே காரணமாக அமைந்த தென்பறைத் தொல்லியனாளர் பலர் ஏற்றுள்ளனர். இப்பண்பாடு பெருங்கற்காலப் பண்பாடு எனவும் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.காரணம் இப்பண்பாடு மக்கள் இறந்தோரை அடக்கம் செய்ய ஈமச் சின்னங்களுக்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தியமையும் இரும்பின் உபயோகத்தை தமது அன்றாட வாழ்க்கையால் பெருமளவு பயன்படுத்தியமையாகும். இலங்கையில் இப்பண்பாடு பற்றிய சம்ப கால ஆய்வுகள் சிங்கள மக்களின் மூதாதையரை விட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வழித் தோன்றள்கள் என்ற கருத்தை முற்றாக நிகாரிக்கின்றது. விஐயன் இலங்கைத்தீவில் குடியேறியதற்கு அவன் வழிவந்தவர்கள் நாகரீகம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கோ எதுவித தொல்லியற் சான்றுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு மாறாக தென்னிந்திய பெருங்காலப் பண்பாட்டின் வருகையோடு இலங்கை நாகரீகம் தோற்றம் பெற்றதற்கான சான்றுகள் கண்டுப்பிடிக்கப்பட்;டுள்ளன. தென்னிந்தியாவிலே கி.பி. 1000 ஆண்டளவில் தோன்றிய இப்பண்பாடு எவ்வாறு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனப் பல்வேறு பண்பாடுகளைத் தோற்றுவிக்கக் காரணமாhக இருந்ததோ அதேபோல் இலங்கையிலும் தமிழ்ப் பண்பாடு தோன்றுவதற்கு இப்பண்பாடே காரணமாக இருக்கின்றது. மானிடவியல் ரீதியில் பெருங்கற்கால மக்களும் தென்னிந்தியத் திராவிடப் பெருங்காலப் பண்பாட்டு மக்களும் ஒரே இன வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மானிடவியாலாளரின் கருத்தாகும். பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய சான்றுகள் தென்னாசியாவிலே பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும் அது திராவிட மொழி பேசும் பிராந்தியமான தென்னிந்தியாவிலே தான் செறிந்து காணப்படுவதோடு சில தனித்துவமான அம்சங்கனையும் கொண்டு விளங்குகிறது. இப்பண்பாட்டிற்குரிய ஈமச்சின்னங்களின் வகையான முதுமக்கள் தாழிகள்,கல்லறைகள், கற்கிடைகள் போன்றன விளங்குகின்றன. தென்தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் புதை குழியும் தாழி அடக்க முறையுமே பெருமளவு பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஈமச் சின்னங்களைக் கொண்டே இப் பண்பாட்டுப் பெயரைப் பெற்றாலும் அச்சின்னங்களை விட முக்கியத்துவம் வாய்ந்த பல பண்பாட்டு அம்சங்களையும் இப்பண்பாடு குறித்து நிற்கிறது. தென்னிந்தியாவின் இரும்பின் அறிமுகம், நீர்பாசனத்துடன் கூடிய பயிர்ச்செய்கை, மட்பாண்ட உபயோகம், கட்டமைப்புடைய சமூகத்தோற்றம், அரச அமைப்பு, என்பன இப்பண்பாட்டுடன் தோற்றம் பெறுகின்றன. சங்க காலத்திலே சிறப்புற்றிருந்த சேர, சோழ, பாண்டிய அரசுகள் இப்பண்பாட்டின் பின்னணியிலே தோன்றியனவாகும். இப்பெருங்கற்காலப் பண்பாட்டின் முதி;ர்ச்சி நிலையே தமிழ் மொழி சங்க இலக்கியங்கள் படைக்கப்படும் அளவிற்கு வளர்ச்சி அடையவழி வகுத்தது. இத்தகைய ஒரு பண்பாடே கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் இலங்கையிலும் பரவி நீர்ப்பாசன நாகரிகத்தை மையமாகக்கொண்ட நகரங்களும் அரசுகளும் தோற்றம் பெறக் காரணம் என்பதை நாட்டின் முக்கிய பண்பாட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இலங்கையில் இப்பண்பாடுகள் நிலவியதற்கான சான்றுகள் அநுராதபுரம், கதிரவெளி,பொப்பரிப்பு,வவுநியா,திசமகாறம,மாந்தை,கேகாலை ,கந்கரோடை, ஆனைக்கோட்டை, காரைநகர், வேலனை, பூநகரி போன்ற இடங்களிலும் இப்பண்பாட்டிற்குரிய சின்னங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் குறுனிக் கற்காலப் பண்பாட்டிற்குரிய சான்றுகளும் கிடைக்கப் பெற்றதனால் இப்பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதெனக் கூறலாம். இவற்றின் ஊடாக ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் திராவிடரே என்பது புலனாகிறது. இன்றைய சிங்கள, தமிழ் மொழி பேசுவோர் அவர்களின் சந்ததியினரே என்பதும் உறுதியாகின்றது. இத்துடன் இவ்விரு மொழி பேசுவோருக்கிடையில் ஏற்பட்ட கலாச்சார வேறுபாடு ஈழத்தின் வரலாற்றுக் கோலத்தில் பௌத்த மதத்தின் வருகையோடுதான் ஏற்பட்டது எனலாம். இங்குள்ள அதாவது பெருங்கற்காலப் பண்பாட்டின் தமிழ் மக்களினதும்,சிங்கள மக்களினதும் மூதாதையர் திராவி மொழிகளே பேசினர். இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு வரலாறு பெருங்கற் காலத்திலிருந்து தனித்துவமான முறையில் தோன்றிவளர்ந்த கிளைவழக்கு என கூறலாம். இன்று தமிழ் மக்களுடையே உள்;ள சமூக பண்பாட்டு பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், மரபுகள், கிரியை முறைகள் என்பவற்றை வரலாற்றை பின் நோக்கிப்பார்த்தால் அவற்றின் தொடக்கமாக பெரும் பாலும் பெருங்கற் காலப்பண்பாடே விளங்குகின்றது. பெருங்கற்கால சமுகத்தின் தொடர்பு சாதன ஊடகமாக பல வித குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்பதை இலங்கை தென்னிந்திய பெருங்கற்கால மட்பாண்டங்களின் அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் சிந்து வெளி நாகரிக காலத்தில் இருந்து பயன்படுத்தப் பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது தென்னிந்திய பெருங்கற்கால மட்பாண்ட குறியீடுகள். சிந்துவெளி நாகரிகத்தில் பின்பற்றிய போதிலும் அந்நாகரிகத்தின் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் பின்பற்றப்பட்ட பண்பாடுகள் மறையவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. பூநகரிப் பகுதியால் எடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் 72 வகையான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டு அவை பெருப்பாலும் தென்னிந்திய மட்பாண்டகுறியீடுகளை ஒத்தவையாக உள்ளன. பொதுவாக பெருங்கற்கால மட்பாண்டங்களில் வரும் எழுத்துக்கள் சமய சின்னங்களாக, குலசின்னங்களாக, வணிக சின்னங்களாக எழுத்துக்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று இதன் எச்ச சொச்சங்கள் காணப்படுகின்றன. சலவைத்தொழில் ஆடைகளிற்கு குறியீடு போடுதல் மாடுகளிற்கு குறியிடுதல் போன்றவற்றை சொல்லலாம். பூநகரியில் கிடைத்த மண்பாண்டங்களிள் பொறிக்கப்பட்ட எழுத்துகள் தமிழ் பாரம்பாரிய வடிவத்தை ஒத்து நிக்கின்றது. இது இற்றைக்கு 2000ம் ஆண்டுக்கு முன் தமிழ் மக்கள் வாழ்ந்ததை எடுத்து சொல்கின்றது. இவ் வரிவடிவங்கள் சங்ககாலத்தை போல திராவிட பெருங்கற்கால பண்பாட்டை வழிவகுத்த மக்களே தமிழ் மொழியை பேசினார் என்பதை உறுதி படுத்துவதாக உள்ளது.

குறுனிக்கற்காலப் பண்பாடு

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையே குறுனிக்கற் காலமாக ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.இப்பண்பாட்டு மக்கள் காட்டுப் புற்களாகத் தோன்றிய பயிர்களில் இருந்து தானியங்களை அறுக்கவும் வேறு தேவைகளிற்குப் பயன்படுத்தவும் சிறிய பிளேட் போன்ற கல் அலகுகளைப் பயன்படுத்தியதால் இக்காலத்தைக் குறுனிக்கற்காலம் அல்லது இடைக்கற்காலம் எனத் தொல்லியலாளர் அழைப்பர்.ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பேயிருந்தே இப்பண்பாடு நிலவியதென்ற கருத்து நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது.அண்மைக்கால ஆய்வுகளால் இலங்கையில் இதன் தோற்றக் காலம் கி.மு 28,000 ஆண்டுகள் எனவும் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் கி.மு 30,000 ஆண்டுகள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இடைக்கற்காலத்திற்குரிய தடயங்கள் யாழ்நாடு தவிர்ந்த ஈழம் முழவதும் காணப்படுன்றன.இக்காலக் கருவிகளை ஆக்குவதற்கு பயன்படுத்திய “குவாட்ஸ்“ இனக் கற்கள் யாழ் குடாநாட்டில் காணப்படாததால்தான் இக்கால ஆயுதங்கள் இங்கு கிடைக்கவில்லை இப்பண்பாடு நிலவியதற்கான சான்றுகளை பலாங்கொட, இரத்தினபுரி, கித்துள்கொட, குறுவிற்றாவ, அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், பூநகரி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்று உறுதிப்படுத்தியுள்ளன. ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த குறுனிக்கற்கால மக்களுக்கும் இடையில் கலாச்சாரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஒரே மாதிரியானதாகக் காணப்படுகின்றன. குறுனிக்கற்காலத்திற்குரிய மக்கள்தான் இன்றைய வேடங்களின் மூதாதையர் ஆவர்.இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக் மொழி ஆகும்.இலங்கைத்தீவிலும் தமிழ்நாட்டிலும் இப்பண்பாட்டைப் பின்பற்றிய மக்களே ஆதி ஒய்ரோயிட் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.இவர்களின் மொழியும் பண்பாடும் பிற்கால திராவிட நாகரிகத்துடன் இணைந்தே இலங்கை நாகரிகம் தோற்றம் பெற்றது

லெமூரியா அல்லது குமரிக்கண்டம் அல்லது கண்டுவானா

Photobucket - Video and Image Hosting
கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இன்று கடல்ப் பரப்பாக இருக்கின்ற இந்து சமுத்திரம் நீர் மூடாத நிலப்பரப்பாக பரந்து விரிந்து கிடந்தது.இன்று இந்தியத் துணைக்கண்டம், அவுஸ்ரேலியா கண்டம் ,ஆபிரிக்காக் கண்டம் என்பன அன்று ஒன்று சேர்ந்த நிலப்பரப்பாக இருந்தன. இந்த நிலப்பரப்பு கடற்கோள் ஒன்றின் தாக்கத்தினால் சிதறப்பட்டு இன்று இந்தியாகவும் அவுஸ்ரேலியாக் கண்டமாகவும், ஆபிரிக்கக் கண்டமாகவும் விரிந்து சென்றன. லெமூரியாக் கண்டத்தின் ஒருபகுதி இந்து சமுத்திரத்தின் கீழ் மூழ்கிப் போய் உள்ளது. இன்று இந்து சமுத்திரத்தினுள் மூழ்கிப் போயுள்ள நிலப்பரப்பு என்பதைச் செய்மதிப் படங்களும் ,பண்டைத் தமிழ்ப் பட்டினமான பூம்புகார்ப் பட்டினம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின௼br />?றமையும் சான்றுபகருகின்றன.கண்ட நகர்வுக் கொள்கையின் அடிப்படையில் லெமூரியாக் கண்டம் கடல்கோளினால் தாக்கப்பட்டு எஞ்சியிருந்த நிலப்பரப்பு குறிப்பிட்ட காலத்திற்கு(கோடான கோடி ஆண்டுகளின் பின்னர்) படிப்படியாக நகர்ந்து இன்று இந்தியா, அவுஸ்ரேலியா, ஆபிரிக்காவாக இன்று தோன்றுகின்றது.இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களின் கரையோரங்களில் காணப்படும் மண்ணின் தன்மை, உயிரினங்கள், மற்றும் கனியவளங்கள் இவற்றிக்கிடையிலான ஒற்றுமை முன்னர் சேர்ந்திருந்தமையை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன. இங்கே தான் உயிரினங்கள் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் நடந்த கூர்ப்பினால்(படிமுறை வளர்ச்சி) முதல் மாந்தவினம் (மனிதன்) தோன்றியதென்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வாளர்கள் தமிழரின் இலக்கியங்கள்,பண்பாடு,புதைபொருள்களின் பழைய கற்காலச் சான்றுகள் என்பனவற்றை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்னர். அவுஸ்ரேலியாவின் சொந்தக்காரரான அபோரியன்ஸ் மக்களுக்கும் ஆபிரிக்காவின் நீக்கிரோ மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பண்பாடு கலாச்சராங்கள் பல ஒத்தனவாகக் காணப்படுகின்றன. உலக நாகரிகம் கறுப்பர்களிடம் இருந்துதான் பிறந்தது.எனவே கறுப்பர்கள் எனப்படும் நாம் பெருமைப்பட வேண்டும்.ரஸ்சியாவின் மூன்று முக்கிய பல்கலைக் கழகங்கள் சேர்ந்து ஆராய்ச்சிகளின் முடிவாக ரஸ்சியாவின் தலைநகர் மொஸ்கோவில் ஏ.கோபிநாத்தோவ் என்ற அறிஞர் ஆராச்சிகளின் அடிப்படையில் உலகின் ஆதிமனிதன் தமிழனே என்ற கருத்தை முதல்முதலாக முன்வைத்தார். உலகின் ஆதிமனிதன் தமிழனே என்று சரித்திரவியல், பூகர்ப்பவியல், ஆதிமனிதவியல், கடலியல், உயிரினவியல், புவியியல்,மொழியியல் என்பனவற்றை வைத்து முடிவுக்கு வந்துள்ளனர்.
Photobucket - Video and Image Hosting

பெருங்கற்காலப் பண்பாடு

பெரிய கற்களை அமைத்து ஈமச் சின்னங்களை அமைத்ததால் இக் கலாச்சாரம் பெருங்கற்காலப் பண்பாடு எனப் பெயர் பெற்றது. ஆனால் கற்களால் அமைக்கப்படாத சவஅடக்கங்களும் தாழியடக்கங்களும் இப்பகுப்பில் அடங்கத்தவறவில்லை. காரணம் இவை யாவற்றுக்கும் இடையே இழைவிட்டோடும் பிற கலாச்சார அம்சங்களாகும். இவ் அம்சங்களிற் கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள், இரும்பாயுதங்கள்,பிற வெண்கலப் பொருட்கள், அணிகலன்கள்ஆகியன அடக்கினதும் இக்கலாச்சாரத்திற்குத் தனித்துவத்தினை அளிப்பனவாக மக்கள் குடியிருப்புக்கள், ஈமச்சின்னங்கள், குளங்கள், வயல்கள், ஆகியன விளங்குகின்றன. இத்தகைய ஓர் அமைப்பினையே தென்னிந்திய பெருங்கற்கால கலாச்சாரத்திலும் காண்பதால் அக்கலாச்சாரத்தின் படர்ச்சியே ஈழத்துப் பெருங்கற்காலம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது. இப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், அவர்கள் அமைத்த ஈமச்சின்னங்கள், சவ அடக்கங்கள்,வயல்கள்,குளங்கள், ஆகிய இந்த நான்கு அமச்சங்களும் இப்பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கின. இலங்கையில் வரலாற்று உதய காலம் கி.மு.1000 இற்கும் கி.மு. 300ற்கும் இடையில் நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் தோற்றம் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கின. வருகையே காரணமாக அமைந்த தென்பறைத் தொல்லியனாளர் பலர் ஏற்றுள்ளனர். இப்பண்பாடு பெருங்கற்காலப் பண்பாடு எனவும் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.காரணம் இப்பண்பாடு மக்கள் இறந்தோரை அடக்கம் செய்ய ஈமச் சின்னங்களுக்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தியமையும் இரும்பின் உபயோகத்தை தமது அன்றாட வாழ்க்கையால் பெருமளவு பயன்படுத்தியமையாகும். இலங்கையில் இப்பண்பாடு பற்றிய சம்ப கால ஆய்வுகள் சிங்கள மக்களின் மூதாதையரை விட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வழித் தோன்றள்கள் என்ற கருத்தை முற்றாக நிகாரிக்கின்றது. விஐயன் இலங்கைத்தீவில் குடியேறியதற்கு அவன் வழிவந்தவர்கள் நாகரீகம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கோ எதுவித தொல்லியற் சான்றுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு மாறாக தென்னிந்திய பெருங்காலப் பண்பாட்டின் வருகையோடு இலங்கை நாகரீகம் தோற்றம் பெற்றதற்கான சான்றுகள் கண்டுப்பிடிக்கப்பட்;டுள்ளன. தென்னிந்தியாவிலே கி.பி. 1000 ஆண்டளவில் தோன்றிய இப்பண்பாடு எவ்வாறு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனப் பல்வேறு பண்பாடுகளைத் தோற்றுவிக்கக் காரணமாhக இருந்ததோ அதேபோல் இலங்கையிலும் தமிழ்ப் பண்பாடு தோன்றுவதற்கு இப்பண்பாடே காரணமாக இருக்கின்றது. மானிடவியல் ரீதியில் பெருங்கற்கால மக்களும் தென்னிந்தியத் திராவிடப் பெருங்காலப் பண்பாட்டு மக்களும் ஒரே இன வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மானிடவியாலாளரின் கருத்தாகும். பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய சான்றுகள் தென்னாசியாவிலே பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும் அது திராவிட மொழி பேசும் பிராந்தியமான தென்னிந்தியாவிலே தான் செறிந்து காணப்படுவதோடு சில தனித்துவமான அம்சங்கனையும் கொண்டு விளங்குகிறது. இப்பண்பாட்டிற்குரிய ஈமச்சின்னங்களின் வகையான முதுமக்கள் தாழிகள்,கல்லறைகள், கற்கிடைகள் போன்றன விளங்குகின்றன. தென்தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் புதை குழியும் தாழி அடக்க முறையுமே பெருமளவு பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஈமச் சின்னங்களைக் கொண்டே இப் பண்பாட்டுப் பெயரைப் பெற்றாலும் அச்சின்னங்களை விட முக்கியத்துவம் வாய்ந்த பல பண்பாட்டு அம்சங்களையும் இப்பண்பாடு குறித்து நிற்கிறது. தென்னிந்தியாவின் இரும்பின் அறிமுகம், நீர்பாசனத்துடன் கூடிய பயிர்ச்செய்கை, மட்பாண்ட உபயோகம், கட்டமைப்புடைய சமூகத்தோற்றம், அரச அமைப்பு, என்பன இப்பண்பாட்டுடன் தோற்றம் பெறுகின்றன. சங்க காலத்திலே சிறப்புற்றிருந்த சேர, சோழ, பாண்டிய அரசுகள் இப்பண்பாட்டின் பின்னணியிலே தோன்றியனவாகும். இப்பெருங்கற்காலப் பண்பாட்டின் முதி;ர்ச்சி நிலையே தமிழ் மொழி சங்க இலக்கியங்கள் படைக்கப்படும் அளவிற்கு வளர்ச்சி அடையவழி வகுத்தது. இத்தகைய ஒரு பண்பாடே கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் இலங்கையிலும் பரவி நீர்ப்பாசன நாகரிகத்தை மையமாகக்கொண்ட நகரங்களும் அரசுகளும் தோற்றம் பெறக் காரணம் என்பதை நாட்டின் முக்கிய பண்பாட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இலங்கையில் இப்பண்பாடுகள் நிலவியதற்கான சான்றுகள் அநுராதபுரம், கதிரவெளி,பொப்பரிப்பு,வவுநியா,திசமகாறம,மாந்தை,கேகாலை ,கந்கரோடை, ஆனைக்கோட்டை, காரைநகர், வேலனை, பூநகரி போன்ற இடங்களிலும் இப்பண்பாட்டிற்குரிய சின்னங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் குறுனிக் கற்காலப் பண்பாட்டிற்குரிய சான்றுகளும் கிடைக்கப் பெற்றதனால் இப்பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதெனக் கூறலாம். இவற்றின் ஊடாக ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் திராவிடரே என்பது புலனாகிறது. இன்றைய சிங்கள, தமிழ் மொழி பேசுவோர் அவர்களின் சந்ததியினரே என்பதும் உறுதியாகின்றது. இத்துடன் இவ்விரு மொழி பேசுவோருக்கிடையில் ஏற்பட்ட கலாச்சார வேறுபாடு ஈழத்தின் வரலாற்றுக் கோலத்தில் பௌத்த மதத்தின் வருகையோடுதான் ஏற்பட்டது எனலாம். இங்குள்ள அதாவது பெருங்கற்காலப் பண்பாட்டின் தமிழ் மக்களினதும்,சிங்கள மக்களினதும் மூதாதையர் திராவி மொழிகளே பேசினர். இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு வரலாறு பெருங்கற் காலத்திலிருந்து தனித்துவமான முறையில் தோன்றிவளர்ந்த கிளைவழக்கு என கூறலாம். இன்று தமிழ் மக்களுடையே உள்;ள சமூக பண்பாட்டு பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், மரபுகள், கிரியை முறைகள் என்பவற்றை வரலாற்றை பின் நோக்கிப்பார்த்தால் அவற்றின் தொடக்கமாக பெரும் பாலும் பெருங்கற் காலப்பண்பாடே விளங்குகின்றது. பெருங்கற்கால சமுகத்தின் தொடர்பு சாதன ஊடகமாக பல வித குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்பதை இலங்கை தென்னிந்திய பெருங்கற்கால மட்பாண்டங்களின் அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் சிந்து வெளி நாகரிக காலத்தில் இருந்து பயன்படுத்தப் பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது தென்னிந்திய பெருங்கற்கால மட்பாண்ட குறியீடுகள். சிந்துவெளி நாகரிகத்தில் பின்பற்றிய போதிலும் அந்நாகரிகத்தின் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் பின்பற்றப்பட்ட பண்பாடுகள் மறையவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. பூநகரிப் பகுதியால் எடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் 72 வகையான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டு அவை பெருப்பாலும் தென்னிந்திய மட்பாண்டகுறியீடுகளை ஒத்தவையாக உள்ளன. பொதுவாக பெருங்கற்கால மட்பாண்டங்களில் வரும் எழுத்துக்கள் சமய சின்னங்களாக, குலசின்னங்களாக, வணிக சின்னங்களாக எழுத்துக்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று இதன் எச்ச சொச்சங்கள் காணப்படுகின்றன. சலவைத்தொழில் ஆடைகளிற்கு குறியீடு போடுதல் மாடுகளிற்கு குறியிடுதல் போன்றவற்றை சொல்லலாம். பூநகரியில் கிடைத்த மண்பாண்டங்களிள் பொறிக்கப்பட்ட எழுத்துகள் தமிழ் பாரம்பாரிய வடிவத்தை ஒத்து நிக்கின்றது. இது இற்றைக்கு 2000ம் ஆண்டுக்கு முன் தமிழ் மக்கள் வாழ்ந்ததை எடுத்து சொல்கின்றது. இவ் வரிவடிவங்கள் சங்ககாலத்தை போல திராவிட பெருங்கற்கால பண்பாட்டை வழிவகுத்த மக்களே தமிழ் மொழியை பேசினார் என்பதை உறுதி படுத்துவதாக உள்ளது

இலங்கையில் மைலையக தமிழ் சகோதரர்களின் வரலாறு

மலையக மக்கள் வரலாறு
1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையில் 8, 26,233 மலையக மக்கள் வாழ்ந்து வந்தனர். இது தொத்த சனத்தொகையில் 5.6 விழுக்காடாகும். சனத் தொகையில் 4வது இடம் ஆனால் 1911ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5, 30, 000 மலையகமக்கள் 12,.9 விழுக்காடு. சனத்தொகையில் 2வது இடம் இந்த நிலை 1965ஆம் ஆண்டுவரை நீடித்தது. இதற்குக் காரணம் இவர்கள் கட்டாயமாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டதேயாகும். இதன் காரணமாக இலங்கையில் மொத்தத் தமிழர் தொகையே குறைந்தது. எடுத்துக்காட்டு:
ஆண்டு சிங்களவர் தமிழர்
1971 66 % 32 %
1981 72 % 27 %
ஆங்கிலேயர் 1820ம் ஆண்டுகளின் பின்னர் தாம் இலங்கையில் புதிய பணிபுரிவதற்குத் தென்னிந்தியத் தமிழ் மக்களை ஏமாற்றி அழைத்து வந்தனர். குறிப்பாக பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறையில் குறைந்த வேதனத்தில் தொழிலாளிகளாக மதுரை, திருநெல்வேலி , இராமநாதபுரம் , தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அப்போது நிலவிய கடுமையான பஞ்சத்தைப் பயன்படுத்தி வறுமையில் வாடிய மக்களை இங்கு அழைத்து வந்தனர். இங்கு மட்டுமல்ல பர்மா, மலேசியா , மேற்கிந்தியத் தீவுகள் , பிஜித்தீவுகள் போன்ற இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இங்கு வந்த மக்கள்பட்ட துயரங்கள் கணக்கற்றவை. இராமேஸ்வரத்திற்கு நூற்றுக்கணக்கான மைல் நடந்து வந்து பின்னர் தலைமன்னாரிலிருந்தும் கால் நடையாகக் கொண்டு செல்லப்பட்ட இம்மக்கள் தமது பயணத்தின் பொழுது மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகிப் போதிய உணவின்றி 40 வீதம் வரை மடிந்தனர். 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1வது கோப்பித் தோட்டத்தில் (கம்பளையில் சிங்கப்பிட்டிய) 14 மலையகத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் கோப்பிக்கு ஏற்பட்ட நோயொன்றின் காரணமாக அது வீழ்ச்சியடைய 1867ம் ஆண்டு ஜேம்ஸ் ரெய்லர் தேயிலைப் பயிர்ச்செய்கையை இலங்கையில் ஆரம்பித்தார். இதன் பின்னர் மலையக மக்களின் தொகை வெகு வேகமாக அதிகரித்தது. 1827ம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது. 1933ம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது. 1931ம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். மு .நடேசு ஜயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர். அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார். 1947ம் ஆண்டு சோல்பரி திட்டத்தின்படி நடந்த 1வது நாடாளுமன்றத் தேர்தலில் 7 மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் 20 தேர்தல் தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெறுவதற்கு இம்மக்களது வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன. தேர்தலில் வலதுசாரி தொழிலாளியக் கட்சியான ஜ. தே. க 93 இடங்களில் 42 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் தமது நலன்கள் பாதிக்கப்படும் என அச்சமடைந்த ஜ. தே. க மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குத திட்டமிட்டது. 1948ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் தமிழ்மக்கள் மீதான 1வது ஒடுக்குமுறைச் சட்டமாக இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்குத் துணயாக 49ம் ஆண்டு இன்னும் 2 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1949ல் இந்தியர், பாக்கிஸ்தானியர் பிரசாவுரிமைச் சட்டம் 1949ல் தேர்தல் திருத்தச்சட்டம் எனவே அவையாகும். 1948ம் ஆண்டு இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் மிகக் கொடிய மனிதவுரிமை மீறல்ச் சட்டமாகும்.. 48ம் ஆண்டு மாசிமாதம் 4ம் திகதி வரை எல்லாருமே பிரித்தானியப் பிரசைகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இதன்பின் மலையக மக்கள் தாம் இலங்கைப் பிரசை என்பதை நிரூபிக்க வேண்டியேற்பட்டது. சிங்களப் பெயரை உடையவர் இலங்கைப் பிரசையாக ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது தமிழ், முஸ்லீம் பெயரையுடைய இம்மக்கள் இலங்கைப் பிரசைகளாகக் கருதப்படவில்லை. இதன் பின்னர் மலையக மக்கள் தாம் இலங்கைப் பிரசை என்பதை நிரூபிக்கவேண்டி ஏற்பட்டது. அவர்கள் தமது தந்தை ழு ச தந்தைவழிப்பாட்டன் இலங்கையில்ப் பிறந்ததை நிரூபித்தல் வேண்டும். அக்காலகட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் வழக்கம் இம்மக்களிடையே இருக்கவில்லை. இச்சட்டத்தை இப்போதைய தமிழ்த் தலைவர்களான பு. பு. பொன்னம்பலம் , சுந்தரலிங்கம் போன்றோர் ஆதரித்தனர். சிங்கள இடதுசாரிக் கட்சியினரும் வெறுமனே பேச்சளவில் எதிர்த்தனரே அன்றி வேறெதுவும் செய்யவில்லை. தந்தை செல்வா மட்டுமே இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு என்று கூறி பொன்னம்பலத்தின் கட்சியிலிருந்து பிரிந்து 49ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். பிரசாவுரிமை பறிக்கப்பட்டபின்னர் 49ம் ஆண்டு தேர்தல் திருத்தச் சட்டமூலம் மலையக மக்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. பிரசாவுரிமைச் சட்டப்படி 1951ம் ஆண்டில் 8,25,000 பேருக்குப் பிரசாவுரிமை கோரி விண்ணப்பித்தனர். 62ம் ஆண்டு வரை ஏறக்குறைய 11 வருடங்கள் கழிந்த பின் 1,34,000 பேருக்கு மட்டுமே அதாவது விண்ணப்பித்தவர்களில் 16 விழுக்காட்டினருக்கு மட்டுமே பிரசாவுரிமை வழங்கப்பட்டது. எனவே இவ்வாறாக முதலில் வம்சாவளி மக்கள் என அழைக்கப்பட்டவர்கள் இப்பொழுது நாடற்ற மக்கள் என்று அழைக்கப்படலாயினர்.

மலையக மக்களிடையே தொழிற் சங்க இயக்கம்.

மலையக மக்கள் மத்தியில் தொழிற் சங்க அமைப்பை முதலில் தோற்றுவித்தவர் கே. நடேசுஐயர் ஆவார். அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பை முதலில் தோற்றுவித்தனர். அது போலவே இலங்கை சமசமாசக்கட்சி அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தது. இவர்களோடு நடேசனும் இணைந்து போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் என தொழிற்சங்க நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டனர். முதன் முறையாக 1940ம் ஆண்டு பதுளையில் மேதினத்தைக் கொண்டாடினர். இக் காலகட்டத்திலே கேவா கெட்டப்பகுதி, முல்லோயாத் தோட்டத்தில் வேலை நிறுத்தத்தின் பொழுது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு கோவிந்தன் என்ற தொழிலாளி மரணமானார். என்றாலும் இடது சாரிகளின் தொழிற்சங்கம் 1942ம் ஆண்டு ஆங்கிலேயரால் தடை செய்யப்படடது. இந்திய எதிர்ப்பு உணர்வு இங்கு வளர்ந்த போது அதுபற்றிப் பேசுவதற்காக இலங்கை வந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒத்துழைப்பால் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமது தேசிய இயக்கமாக 39ஆம் ஆண்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்கின்ற அமைப்பை உருவாக்கினர். இவர்கள் திரு பெரியசுந்தரம் தலைமையில் தொழிற்சங்க அமைப்பையும் தொடங்கினர். இவர்களது செல்வாக்கிற்கு முன்னாள் நடேசஜயர் தோல்வியைத் தழுவினார். இத்தொழிற் சங்கமே 1950களில் தொண்டமான் தலைமையில் இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் (D,W,C) என்று பெயர் மாற்றம் பெற்றது. தொண்டமான் ஏனைய எல்லா அமைப்புகளையும் விட மலையக மக்களுடைய தேசீய உணர்வை திறமையாகப் பயன்படுத்தினார். அத்தோடு தனது தொழிற்சங்க அமைப்பைப் பெரிதாகக் கட்டியமைத்து பணபலம் நிரம்பிய ஒரு தொழிற் சங்க சாம்ராஜ்யமாக்கினார். இவரது போக்குப் பிடிக்காமல் இ. தொ. கா. வின் செயலாளராக இருந்த ஜெனாப் ஏ. அசீஸ் 1956ஆம் ஆண்டளவில் பிரிந்து ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற் சங்கத்தை உருவாக்கினார். இவரோடு ஊ.ஏ. வேலுப்பிள்ளை, நடேசன் போன்றோரும் பிரிந்து சென்றனர். அசீஸின் பின்னர் இ. தோ. கா. வின் செயலாளராக இருந்த வெள்ளையன் என்பவர் அதிலிருந்து வெளியேறி தேசிய தொழிலாளர் சங்கம் என்கின்ற புது அமைப்பைத் தோற்றுவித்தார். இதில் ஊ.ஏ. வேலுப்பிள்ளையும் சேர்ந்து கொண்டார். தமிழரசுக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற தொழிற்சங்க அமைப்பை 62ஆம் ஆண்டளவில் உருவாக்கியது. எனினும் மலையக மக்களுக்கு இக்கழகம் அந்நியப்பட்டே இருந்தது. தொண்டமான் தமிழரசுக் கட்சித் தலைவர்களோடு தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொண்டதோடு இக் கழகத்தின் வளர்ச்சியும் முடிவுக்கு வந்தது. இன்று மலையகத்தில் தொண்டமானுடைய தொழிற் சங்கமும் ஐ. தே. .கவின் லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர்; சங்கமுமே பெரியவை. 20ற்கு மேற்பட்ட சிறு தொழிற்சங்கங்கள் அங்கு உள்ளன. இவை தமக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. என்றாலும் மலையக மக்களுடைய போராட்டங்களை ஐ. தே. க. அரசைப் பாதிக்காத வண்ணம் இன்றளவும் தொண்டமான் நடந்து வருகின்றார்

கதிரமலை அரசும் சிங்கை நகர் அரசும்

கதிரமலை அரசு கி.பி 1ம் நூற்றாண்டில்; இருந்து கி.பி 9ம் நூற்றாண்டு வரை நீடித்துள்ளது கந்தரோடை எனப்படும் கதிரமலையே ஈழமண்டல ஆட்சியாளர்களின் தலைநகரமாக உள்ளது. இவ் அரசை தென்னிலங்கை பௌத்த ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் படை எடுத்துத் தமது ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். இது கி.பி 8ம் நூற்றாண்டு வரை அடிக்கடி ஆட்சிக்குட்படுத்தப்பட்டது. இந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த இந்நகரை ஆட்சி செய்த 2ம் மகிந்த மன்னனுக்கு எதிராக (777-797) உத்தர தேசத்து முதலிகள் கிளர்ச்சி செய்தனர.; இக்கிளர்ச்சிக்குக் கலிங்க தேசத்தவனான உத்தரசிங்கனே தலைமை தாங்கினான். நெடுங்காலமாக இழந்திருந்த உரிமையை மீட்கும் வகையில், போரிட்டு நாகதீபத்தை உத்தரசிங்கன் பெற்றுக்கொண்டான். இந்த நிகழ்வு கி.பி 785 இல் ஆகும். வெற்றி கொண்ட உத்தரசிங்கன் கதிரமலையை தலைநகராகக் கொண்டு, உத்தர தேசத்தை ஆண்டு வந்தான். கந்தரோடைப் பிரதேசம் பௌத்தத்தின் செல்வாக்கினால் பௌத்த மக்களது முக்கிய பிரதேசமாக மாறியிருந்தது. பௌத்தம் நாகதீபத்தில் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து விடுவித்தான். நகுலேஸ்வரர் கோயில்,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களை உத்திரசிங்கனின் மனைவி மாருதப்புரவீகவல்லி கட்டுவித்தார். யாழ்ப்பாண இராட்சியத்தில் சைவம் இழிவு நிலையிலிருப்பதைக் கண்டு புத்தூக்கம் அளிக்க விரும்பிக் காசிப் பிராமணர்கள், பெரியமனத்தூளார் என்ற அந்தணர் என்பவர்களை வருவித்துள்ளான். இந்தியாவிலிருந்து சில விக்கிரகங்களை எடுத்து வரப்பட்டு இந்துக் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விக்கிரகங்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் பௌத்தம் கதிரமலை, வல்லிபுரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. அதாவது நாகதீபத்தின் மேற்குப் பகுதி கிழக்குப் பகுதி என்பன வேற்றுமத ஆதிக்கத்திலிருக்கத் தென்பகுpதி (யாழ்ப்பாணம்) மக்கள் விரும்பிக் குடியேறியிராத பிரதேசமாக விளங்கியது. இத்தகைய நிலையில் தனது தலைநகரை இடம் மாற்றுவதற்கு உத்திரசிங்கன் விரும்பினான். இதனையே சைவம் சிறப்புறக்கூடிய புதியதொரு பிரதேசத்தை அவன் செய்ய விரும்பினான். இதன் விளைவே சிங்கநகர் உதயமானது. உத்திரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராட்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்திற்கு திடீர் வி ஜயம் ஒன்றினை மேற்கொண்டான.; அவன் வன்னி மார்க்கமாகச் செல்கையில், வன்னியர்கள் ஏழு பேரும் எதிர்கொண்டு வந்த வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். அதற்கு உத்திரசிங்கன் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்டதே தலைநகர் சிங்கநகர் ஆகும். தமிழரசின் ஆரம்பத் தலைநகரான சிங்கநகர் என்பது யாழ்ப்பாணத்திற்கு வெளியே வன்னிப் பிராந்தியத்தில் குறிப்பாக பூநகரியில் இருந்ததெனக் கூறமுடியும். வல்லிபுரப் பகுதியிலேயே சிங்கைநகர் இருந்ததெனவும், நல்லூருக்கு அருகில் இருந்ததெனவும், வரலாற்றாசிரியர்கள் கொள்வது ஏற்றதாகவில்லை. சிங்கநகரை உத்திரசிங்கன் பகுதியிலேயே நிறுவினான், என்பது பொருத்தமானது. ஜீ.புஸ்பரட்ணத்தின் ஆய்வுகளிலிருந்து பூநகரிப் பிரதேசம் பண்டைய இராட்சியம் ஒன்றின் தளமான பிரதேசமாக விளங்கியிருக்கின்றது எனத் தெரிகிறது. பூநகரிப் பிரதேசத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் இதனை நிரூபிக்கின்றன. கி.பி.10ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி.1003 இல் இராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்றும் 11ஆம் நூற்றாண்டின் பின் முற்பகுதியில் சோழர் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நிலவியதாகச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சோழரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் நிர்வகித்து வந்தார்கள். இச்சோழ மன்னனின் பிரதிநதியாக புவனேகவாகு சிங்கைநகரி;ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளான். 13ஆம் நூ ற்றாண்டின் நடுப் பகுதி வரை சிங்கைநகர் வட இலங்கையின் தலைநகராகவும், இந்த அரசு சோழரின் ஆதிக்கத்தினுள்ளும் இருந்தது. உத்திரசிங்க மன்னன் கதிரமலையிலிருந்து தனது தலைநகரைப் பு +நகரிக்கு மாற்றிக் கொண்டான். யாழ்ப்பாணக் குடா நாட்டில் பௌத்தமும் சிங்களவரும் ஆதிக்கம் பெற்றதால் இந்தத் தலைநகர் இடம் மாற்றம் நிகழ்ந்தது. மீண்டும் 13ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மாறியது. நாகதீவிலிருந்து சிங்களவர்கள் தென் புலம் பெயர்ந்தனர். கலிங்கத்து (மாகன்) மீண்டும் உத்தரதேச மன்னனாகச் சிங் கை நகரில் முடிசூடிக்கொண்ட செய்தி, எஞ்சிய பௌத்த சிங்களவரையும் இடம் பெயரச் செய்துள்ளது, எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண இராச்சியம் (கி.பி 13 - கி.பி 17 வரை)

யாழ்ப்பாண இராச்சியம் என்று கூறும்பொழுது போர்த்துக்கேயர் இலங்கை வந்தபொழுது யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய வன்னி மையங்களைக் கொண்டிருந்த இராச்சியமாகக் கருதப்படுகின்றது. இவர்களது ஆதிக்கம் சில வேளைகளில் புத்தளம் கற்பிட்டி வiரைக்கும், பின்னர் நீர் கொழும்பு வரைக்கும் கிழக்குப் பகுதியில் பாணமை வரைக்கும் பரவியிருந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் வடக்கே யாழ்ப்பாண அரசு அடங்காப்பற்று வன்னிமை, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், மாவட்ட வன்னிமைகள் ஆகியனவே இவை. பின்னர் யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியுற்றது. தமிழீழத்தின் கிழக்கிலும், மேற்கிலும் இந்தத் தமிழ் வன்னிமைகள் கோட்டை, கண்டி அரசுகளின் மேலாண்மைக்கு உட்பட்டு இருந்தன. ஆனால் வன்னியில் இருந்த அடங்காப்பற்று வன்னிமைகள் எவராலும் அடக்கி ஆளமுடியவிலலை. பின்னர் ஆங்கிலேயர் காலத்திலேதான் பண்டார வன்னியன் வீழ்ச்சியோடு இதுவும் வீழ்ச்சியுற்றது. கி.பி 13ஆம் நூற்றாண்டிலே தோன்றிய யாழ்ப்பாண இராச்சியம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நீடித்தது. பொதுவாக இதனை ஆண்ட அரசரை ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைப்பர். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து படையெடுப்புக்கள் நடத்தி வெற்றி கொண்ட பரம்பரை ஆகும். இவர்களது ஆட்சி மிகச்சிறப்பாக இருந்து வந்த காலத்திலே போர்த்துக்கேயர் ஆதிக்கத்துக்குப் பின்னர் அதனை எதிர்த்த சங்கிலி மன்னனுடைய தோல்வியோடு முடிவிற்கு வருகின்றது. சங்கிலியன் இவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமையால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பேர்த்துககேயர் முயன்றனர். இதன்பின் 1560ஆம் ஆண்டு சங்கிலியனுக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தப்பட்டது. இதனைச் சங்கிலியன் முறியடித்தான். எனினும் பின்னர் ஏற்பட்ட பதவிப் போட்டிகள் காரணமாக சங்கிலியன் இறக்க பிலிட்டி ஒலிவேரா என்ற போர்த்துக்கேய தளபதி தலைமையில் ஒரு படை தரைவழியாகவும் அனுப்பப்பட்டது. தரை வழியாக வந்த 5000 போர்; வீரரைக் கொண்ட படை பூ நகரிக்கூடாகவே வந்தது. இவ்வாறாக 1019ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. அப்போது ஆண்ட சங்கிலி குமாரன் என்பவன் சிறைப்பிடிக்கப்பட்டு கோவாவிற்கு அனுப்பப்பட்டான்.

தமிழீழம் அதன் அநிய படையெடுப்புகளும் அதன் இலாப நட்டமும்

இலங்கை என்று அழைக்கப்பட்ட நாட்டிலே ஐரோப்பியர் வரமுன்னர் சுதந்திரமாக இயங்கிய மூன்று இராச்சியங்கள் இருந்தன.கண்டி, கோட்டை,யாழ்ப்பாணம் என்பனவே அவை. யாழ்ப்பாண இராச்சியம் என்பது யாழ்ப்பாணப் பகுதியையும், தீவுப் பகுதிகளையும், மன்னார், முல்லைத்தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. 1619ம் ஆண்டு யாழ்ப்பாணம் அடிமைப்படுத்தப்பட்டது. அதாவது போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இவ்வாறு எமது தமிழீழப் பகுதி அந்தியரிடம் அடிமைப்படுவதற்கு காரணம் என்ன? 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல புதிய மாற்றங்கள் தோன்றின. கொலம்பஸ், வஸ்கொடகாமா, மகலன், போன்ற கடலோடிகள் தென்னமரிக்க, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கும் புதிய கடல் பாதைகளைக் கண்டு பிடித்தனர். இதன் மூலம் இந்நாடுகளிடமிருந்த செல்வங்களையறிந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள், வணிகம் செய்வதற்காக வருவது போல் வந்து இந்த நாடுகளை அடிமைப்படுத்தினர் இவ்வாறு போர்த்துக்கல், ஒல்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போன்ற நாடுகள் 3ம் உலக நாடுகளை அடிமைப்படுத்தின. அதாவது தமது நலனுக்காக அப்பொழுது 3ம் உலகநாடுகள் என்று அழைக்கப்படும் ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க (இலத்தீன் அமெரிக்கா) நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்டமையே ஏகாதிபத்தியங்கள் எனப்படும் இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகள் குடியேற்ற நாடுகள் என்று அழைக்கப்படும்

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ( 1796-1948).
தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலம் இன்றுவரை மாறாத தாக்கங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஆங்கிலேயர் தாம் அடிமைப்படுத்திய நாடுகளில் அங்கு வாழும் மக்களிடையே வேற்றுமைகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் ஆண்டமைக்கு இலங்கையும் ஓது உதாரணம். ஆங்கிலேயர் இலங்கையை விட்டுச் சென்றபொழுது அரசியல் அதிகாரத்தை சிங்களவரிடமே ஒப்படைத்துச் சென்றதால் எமது மக்கள் இன்று போராட வேண்டி உள்ளது. அவர்கள் இங்கு புகுத்திய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை இறுதியில் தமிழ் மக்களுக்கு பெரிய நாசத்தை விளைவித்தது. தமிழ் நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான மக்களைக் கொண்டு வந்து குடியேற்றி அவர்களையும் இறுதியில் சிங்களவர் காலடியில் விட்டுச் சென்றனர். 1948ம் ஆண்டின் பின் பதவிக்கு வந்த சிங்களக் கட்சிகள் இனவாதம் பேசுவதற்கு ஒரு சில தமிழர்கள் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் இருப்பதையும் மலையக மக்கள் கண்டிச் சிங்களவர்களுடைய இடங்களைப் பறித்துவிட்டதாகவும் இனவாதக் கூச்சல் எழுப்பி ஆட்சி செய்வதற்கும் ஆங்கிலேயர் வழிவகுத்தனர். ஆங்கிலேயர் 1833ம் ஆண்டு கோல்புறூக் என்பவரின் பரிந்துரையின் படி இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தனர். முதலில் 5 மாகாணங்களாவும் பின்னர் 7 மகாணங்களாகவும் தமது நிர்வாக வசதிக்கேற்ப பிரித்தனர். இதன் பின்னர் மெல்ல மெல்ல ஒரு புதிய ஆட்சி முறையையும் இங்கு புகுத்தினர். அதற்கு வசதியாக ஆங்கிலக் கல்வியை கிறிஸ்தவ மிசனரிமாரின் உதவியோடு இங்கு புகுத்தினர். காலத்துக்கு காலம் மாற்றங்களைச் செய்து தரம் புகுத்திய முதலாளித்துவ பொருண்மிய முறைக்குப் பயன்படுத்தத்தக்க வகையில் ஒரு உள்நாட்டு மத்திய வகுப்பைத் தோற்றுவித்தனர். இதன் பயனாக படித்த பணமுள்ள தமிழ், சிங்கள உயர் குடியினரை மெதுவாக ஆட்சிப் பொறுப்புக்களில் பயிற்றுவிக்கத் தொடங்கினர். தொடக்கத்தில் கரையோரங்களிலே அங்கில மிசனரிமாரின் செல்வாக்கு காரணமாக கரையோர உயர்குடியினரே ஆங்கில அரசியலில் பங்கெடுத்தனர். தொடக்கத்தில் அதிக கல்வியும் தகுதியும் பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் முன்னணி வகித்தனர். 1916ம் ஆண்டு படித்த இலங்கையர் தெரிவுக்கான தேர்தலில் பொன்னம்பலம் இராமநாதன் என்பவர் சாதி குறைந்தவர் என்ற கருதப்பட்ட சிங்களவரைத் தோற்கடித்தார். இதுபோலவே 1919ம் ஆண்டு இலங்கையருக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் தலைவராக பொன்னம்பலம் அருணாசலம் விளங்கினார். தொடக்கத்தில் எவ்வாறு இரு இனத்தைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றாகச் செயற்பட்டாலும் 1920களின் பின்னர் தமிழ்த் தலைவர்கள் தமது கோரிக்கைகளைச் சிங்களத் தலைவர்கள் புறக்கணித் தொடங்கவே தேசிய காங்கிரசில் இருந்து விலகத் தொடங்கினர். 1915ம் ஆண்டு இலங்கையின் முதல் இனக்கலவரம் என்று கூறப்படும் சிங்களவர்களும் முஸ்லீம்களுக்கும் இடையிலான வர்த்தகப் பிணக்கின் போது மூண்ட கலவரத்தை ஆங்கிலேயர் கடுமையாக அடக்கினர். இதன் போது பாதிக்கப்பட்ட சிங்களவருக்காக லண்டன் மாநகரம் சென்று வாதாடியவர் பொன்னம்பலம் இராமநாதன். இவர் இறுதியில் சிங்கள அரசியலிலிருந்து விலகி யாழ்ப்பாணம் வந்து கல்வியையும் சைவசமயத்தையும் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினார்

ஆங்கிலேயர் இங்கு புகுத்திய அரசியல் வளர்ச்சி முறை

ஆங்கிலேயர் இங்கு புகுத்திய அரசியல் ஆட்சிமுறையின் வளர்ச்சி வித்தியாசமானது. தாங்கள் புகுத்திய அரசியல் முறையில் பல நச்சு விதைகளை விதைதத்து விட்டே சென்றனர். 1833ஆம் ஆண்டு கோல்புறூக் காலத்தில் தொடங்கி 47ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் திட்டம் வரை இவற்றை நாம் பார்க்கலாம். இலங்கையர்க்கும் ஆட்சியில் பங்கு பற்ற வாய்ப்பு அளிப்பதாகக் கூறி இவர்கள் உருவாக்கிய அரசியல் சீர் திருத்தங்கள் பெரும்பான்மை சிறுபான்மை மோதலைத் தூண்டி விடவும் சிங்களவர்களிடையே கண்டிச்சிங்களவர், கரையோரச்சிங்களவர், என்ற பிரிவினை வளர்க்கவும் வழிவகுத்தனர். தமக்கு ஆதரவான ஒரு மேட்டுக்குடி வகுப்பினை உருவாக்கி அதன்முலம் தமது நிர்வாகத்தை நடத்தித் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இலங்கையில் உருவான இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்த தேசியவாதிகள் மேட்டுக்குடி அரசியல் சீர் திருத்தவாதிகள் என்கின்ற இரண்டு பிரிவினரை இவர்கள் பயன்படுத்தினர். தேசியவாதிகள் தேசியவிடுதலையை விரும்பும் அதே சமயம் மாற்றுப் பிரிவினர், அல்லது பழமை பேரினவாதிகள் பேச்சுவாழ்த்தைகள் மூலம் ஆங்கிலேயரிடமிருந்து தமக்குக் கூடிய அதிகாரங்களைப் பெற்று, அவர்களின் கீழ் செயற்பட விருப்பம் கொண்டார்கள். இவ்விரண்டு பிரிவினரின் வேறுபாடுகளை ஆங்கிலேயர் தமக்குக் சாதகமாக்கிக் கொண்டனர். அதனை நாங்கள் 1924ஆம் ஆண்டு மனிங் என்பவரின் அரசியல் திட்டத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.பலமான அரசியல் சக்தியாக இலங்கைத் தேசிய காங்கிரஸ் வளர்வதைத் தடுப்பதற்காகக் கண்டியர்களையும், தமிழர்களையும், தமக்கு சாதகமாகப் பயன்படுத்தினர். இவைவழியான தேர்தல் தொகுதி முறையைக் கொண்டு வந்தனர். அதேபோல பிரதேச வாரியான தேர்தல் தொகுதி முறையைக் கொண்டு வந்து மேட்டுக்குடி சிங்களவர், தமிழர்களிடையேயும் பிளவுகளையும் உருவாக்கினர். புதிய அரசியல் திட்டங்களில் தமிழருடைய செல்வாக்கு குறைந்ததனால் தமிழ்த்தலைவர்கள் முரண்படத் தொடங்கினர். இதனால் அருணாசலம் பதவி விலகினார். அதுபோலவே கண்டிய சிங்களவர்களும் தமக்கு கூடிய அதிகாரம் கோரி கண்டிய பிரச்சனைகளுக்கு சமஸ்டி அமைப்பே தீர்வைத்தரும் எனக் கூறினர். இதனை அப்போது இருந்த சிங்களத் தலைவர்கள் எதிர்த்தனர். (S.W.R.D பண்டாரநாயக்கா மட்டும் இதனை ஆதரித்தார்.) இவ்வாறாக ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம் வேலைசெய்யத் தொடங்கியது. 1911ம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்றோர் கரையோர சிங்களவரில் 3.5 விழுக்காடாகவும் தமிழரில் 3.1விழுக்காடாகவும் இருந்தது. இந்த இரண்டு பகுதி மக்களையே ஆங்கிலேயர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர். அத்தகைய பழமைபேண் வாதிகளுக்குமாறாக தேசியவாதிகளும் யாழ்ப்பாணத்தமிழரிடையே தோற்றம் பெற்றனர். 1924ம்ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டது. மாணவர் காங்கிரஸ் என்கின்ற பெயரில் வறண்டி பேரின்பநாயகம், எஸ் நடேசன், எம்.பாலசுந்தரம், நாகையா போன்றோரால் உருவாக்கப்பட்டது. இவர்களது நோக்கம் அந்;நியரிடமிருந்து விடுதலை பெறல், இனவாதத்தினை இல்லாதொழித்தல், தமிழரிடையே தீண்டாமையை ஒழித்தல், தமிழ்மொழியை வளர்த்தல். இவர்கள் இலங்கையிலே முதன்முறையாக 1924ம் ஆண்டும், 1913ம் ஆண்டும் நடாத்தப்பட்ட தேர்தல்களைப் புறக்கணிப்புச் செய்தனர். 24ம் ஆண்டு மனிங் என்பவரின் திட்டப்படி நடைபெற்ற சட்டசபைக்கான தேர்தலையும் பின் 31ம் ஆண்டு டொனமூரின் திட்டப்படி நடைபெற்ற அரசாங்க சபைக்கான தேபுதலையும் பயனற்றவை எனக் கூறி புறக்கணிப்புச் செய்தனர். அதே சமயம் ஆறுமுகநாவலர் போன்றோர் ஆங்கிலேயரின் அந்நிய செல்வாக்கு பரவுவதைத் தடுக்கும்முகமாக சைவசமய தமழ் மொழி வளர்ச்சிக்காக இன்னொரு வகையில் முயன்றனர். மனிங் சீர்திருத்தங்களின் பின்னர் பிரதேசவாரியாக பிரதிநிதித்துவ முறை புகுத்தப்பட்டமையால் அதுவரை காலமும் பெரும்பான்மை இனமாகவே தங்களை மாற்றிவந்த தமிழ்த்தலைவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்தனர். அப்போது சிங்களத்தலைவர்கள் மேல்மாகாணத்தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதியை அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறினர். இதனைத் தொடர்ந்தே அருணாசலம் இராமநாதன் போன்றோர் தேசியகாங்கிரசிலிருந்து விலகினர். இதுபோலவே பின்னர் 1931ம்ஆண்டு டொனமூர் பரிந்துரைகளின் பின்னர் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு இலங்கை 50 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அரசாங்க சபையென்று ஒரு அமைப்பும் 7 துறைகளுக்குப் பொறுப்பான தற்போதைய அமைச்சரவைக்கு முன்னோடியான நிர்வாகக்குழு அமைப்பு முறையொன்றும் கொண்டு வரப்பட்டது. இந்தப் புதியமுறையின் கீழும் தமிழ் மக்களுடைய அடிமைத்தனத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது. வடக்கிற்கு 4 தொகுதிகள் கிழக்கிற்கு 20 தொகுதி மட்டுமே தமிழருக்குக் கிடைத்தது. அதுமட்டுமன்றி 7 நிர்வாகக்குழுத்தலைவர்களும் முற்றிலும் சிங்களவர்களாகவே இருந்தனர். இந்த முறையில் விவசாயத்துறைக்குப் பொறுப்பாகவிருந்த பொன் ஸ்ரீபன் சேனநாயக்க திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற செயற்பாடுகளைத் தொடங்கினார். பட்டிப்பளை எனப்படும் கல்லோயா குடியேற்றத் திட்டத்திற்கான தொடக்கம் இக்கட்டத்திலேயே நிகழ்ந்தது. பின்னர் சோல்பரியினுடைய பரிந்துரைகளின் படி இலங்கைக்கு ஆணிலப்பத அந்தஸ்து (டொமினியன்) வழங்கப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்ற சனநாயக முறையைப் பின்பற்றி (வெஸ்ட்மினிஸ்ர்முறைமை) மேற்சபையும் கீழ்ச்சபையையும் கொண்ட ஒரு நாடாளுமன்றமும், பிரதமமந்திரியைத் தலைவராகக் கொண்டஒரு முறையையும் புகுத்தப்படுகிறது. இலங்கை 95 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 50லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றனர். புதியமுறையின் கீழ் தமிழர் சார்பாக தமிழ்காங்கிரஸ் கட்சி 47ம் ஆண்டு நடந்த முதல்தேர்தலில் 9 இடங்களை மட்டுமே பெறுகின்றது. இன்றிலிருந்து பெரும்பான்மை சிறுபான்மை என்கின்ற மோதல் படிப்படியாக வலுக்கத் தொடங்குகின்றது.

இலங்கையின் கட்சி முறையும் அதன் தோற்றமும்.

இலங்கையில் 1947ம் ஆண்டு பொதுத்தேர்தலை அடிப்படையாக வைத்து பலகட்சிகள் தோற்றம் பெறுகின்றன. 1920ம் ஆண்டளவில் இலங்கையின் தொழிற்சங்க முன்னோடியாகக் காணப்படும் A . E. குணசிங்க என்பவர் தொழிற்கட்சி என்னும் ஓர் அமைப்பை உருவாக்கினார். என்றாலும் அது ஒரு பரந்த கட்சியாகக் காணப்படுவதில்லை. வெளிநாடு சென்று படித்துப் பட்டம் பெற்று பொதுவுடமைக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்ட கலாநிதி .S .A. விக்கிரமசிங்க , கலாநிதி . N .M. பெரேரா , கலாநிதி . கொல்வின் R. D. பிலிப். குணவர்த்தனா போன்றோர் ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாக வைத்து 1935ம் ஆண்டளவில் இலங்கைச் சமசமாஜக் கட்சி என முதலாவது கட்சியினை ஆரம்பித்தனர். இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து வந்த பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு 1946ம் ஆண்டு D.S. சேனநாயக்கா ஜக்கிய தேசியக் கட்சியை ஆரம்பிக்கின்றார். இக்கட்சியோடு சிங்கள மகாசபை, முஸ்லீம் லீக் என்ற இரு அமைப்புக்களும் சேர்ந்து கொள்கின்றன. சிங்கள மகாசபை என்பது சிங்களக் கலாசாரங்களையும் புத்தமதப் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்காக 1937ம் ஆண்டு S. W . R. D. பண்டாரநாயக்கா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதுபோலவே 1944ம் ஆண்டு G. G. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ( A. C. T. C ) எனும் கட்சியை ஆரம்பித்தார். 1947ம் ஆண்டுத் தேர்தலில் ஜ .தே. கட்சி 42 , இ. ச. ச. கட்சி (L. S .S. P ) 10, தமிழ் காங்கிரஸ் 7, இலங்கை இந்தியக் காங்கிரஸ் 6, ஏனைய இரண்டு பொதுவுடமைக் கட்சிகள் 8, எனஆசனங்களைப் பெற்றன. இவ்வாறாகத் தேர்தலில் போட்டியாவதற்காக இக்கட்சிகள் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் இம் மூன்று கட்சிகளிலும் இருந்து பல்வேறு கட்சிகள் பிரிந்து தொடங்கப்பட்டன. இலங்கை சமசமாஜக்கட்சியிலிருந்து பிலிப்குணவர்த்ததன 1950களில் பிரிந்து ( V.L.S.S.P ) என்றொரு கட்சியை ஆரம்பிக்கின்றார். அது போலவே எட்மன்ட் சமரக்கொடி என்பவர் 1960களில் ( L. S. S. R ( R )என்னும் கட்சியைத் தொடங்கினார். S. A. விக்கிரமசிங்க என்பவர் இரண்டாம் உலகப்போரின் சமசமாஜசக் கட்சியோடு ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இலங்கை கொம்யூனிஸ் கட்சி (U. P)என்பதனை ஆரம்பித்தார். இக் கட்சி சோவியத் யூனியனுக்குச் சார்பான கட்சி. பின்னர் இக்கட்சியிலிருந்தும் 1960களில் N.சண்முகதாசன் என்பவர் பிரிந்து சீனச் சார்பான இலங்கைப் பொதுவுடமைக்கட்சியை ஆரம்பிக்கிறார். பின்னர் இதிலிருந்து றோகன விஜயவீர அதிதீவிரமான போக்குள்ள J.V.P. எனப்படும் மக்கள் விடுதலை முன்னனியை ஆரம்பிக்கின்றார். ஜ. தே. க. யின் 1வது அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பண்டாரநாயக்க 1951ம் ஆண்டு ஜ. தே. க. வின் போக்குப் பிடிக்காமல் அதிலிருந்து பிரிந்து ( S . L. R. P )சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பதனை ஆரம்பிக்கிறார். 1944ம் ஆண்டு தோன்றிய தமிழ் காங்கிரஸ் கட்சி ஜ.தே க. வின் ஆட்சியோடு கூட்டுச் சேர்ந்து மலையக மக்களை நாடற்ரவராக அவர்களது குடியுரிமையைப் பறித்த கட்டத்திற்கு ஆதரவு கொடுத்த பொழுது S. J. V செல்வநாயகம் , வன்னியசிங்கம், ( கோப்பாய் கோமகன்) நாகநாதன் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சியை (சமஸ்டிக் கட்சி) தொடங்கினார்கள். பின்னர் இதிலிருந்து தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை ஊர்காவற்துறை நவரத்தினம் ஆரம்பித்தார்