Monday, November 20, 2006

யாழ்ப்பாண இராச்சியம் (கி.பி 13 - கி.பி 17 வரை)

யாழ்ப்பாண இராச்சியம் என்று கூறும்பொழுது போர்த்துக்கேயர் இலங்கை வந்தபொழுது யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய வன்னி மையங்களைக் கொண்டிருந்த இராச்சியமாகக் கருதப்படுகின்றது. இவர்களது ஆதிக்கம் சில வேளைகளில் புத்தளம் கற்பிட்டி வiரைக்கும், பின்னர் நீர் கொழும்பு வரைக்கும் கிழக்குப் பகுதியில் பாணமை வரைக்கும் பரவியிருந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் வடக்கே யாழ்ப்பாண அரசு அடங்காப்பற்று வன்னிமை, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், மாவட்ட வன்னிமைகள் ஆகியனவே இவை. பின்னர் யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியுற்றது. தமிழீழத்தின் கிழக்கிலும், மேற்கிலும் இந்தத் தமிழ் வன்னிமைகள் கோட்டை, கண்டி அரசுகளின் மேலாண்மைக்கு உட்பட்டு இருந்தன. ஆனால் வன்னியில் இருந்த அடங்காப்பற்று வன்னிமைகள் எவராலும் அடக்கி ஆளமுடியவிலலை. பின்னர் ஆங்கிலேயர் காலத்திலேதான் பண்டார வன்னியன் வீழ்ச்சியோடு இதுவும் வீழ்ச்சியுற்றது. கி.பி 13ஆம் நூற்றாண்டிலே தோன்றிய யாழ்ப்பாண இராச்சியம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நீடித்தது. பொதுவாக இதனை ஆண்ட அரசரை ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைப்பர். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து படையெடுப்புக்கள் நடத்தி வெற்றி கொண்ட பரம்பரை ஆகும். இவர்களது ஆட்சி மிகச்சிறப்பாக இருந்து வந்த காலத்திலே போர்த்துக்கேயர் ஆதிக்கத்துக்குப் பின்னர் அதனை எதிர்த்த சங்கிலி மன்னனுடைய தோல்வியோடு முடிவிற்கு வருகின்றது. சங்கிலியன் இவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமையால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பேர்த்துககேயர் முயன்றனர். இதன்பின் 1560ஆம் ஆண்டு சங்கிலியனுக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தப்பட்டது. இதனைச் சங்கிலியன் முறியடித்தான். எனினும் பின்னர் ஏற்பட்ட பதவிப் போட்டிகள் காரணமாக சங்கிலியன் இறக்க பிலிட்டி ஒலிவேரா என்ற போர்த்துக்கேய தளபதி தலைமையில் ஒரு படை தரைவழியாகவும் அனுப்பப்பட்டது. தரை வழியாக வந்த 5000 போர்; வீரரைக் கொண்ட படை பூ நகரிக்கூடாகவே வந்தது. இவ்வாறாக 1019ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. அப்போது ஆண்ட சங்கிலி குமாரன் என்பவன் சிறைப்பிடிக்கப்பட்டு கோவாவிற்கு அனுப்பப்பட்டான்.

No comments: