Monday, November 20, 2006

பெருங்கற்காலப் பண்பாடு

பெரிய கற்களை அமைத்து ஈமச் சின்னங்களை அமைத்ததால் இக் கலாச்சாரம் பெருங்கற்காலப் பண்பாடு எனப் பெயர் பெற்றது. ஆனால் கற்களால் அமைக்கப்படாத சவஅடக்கங்களும் தாழியடக்கங்களும் இப்பகுப்பில் அடங்கத்தவறவில்லை. காரணம் இவை யாவற்றுக்கும் இடையே இழைவிட்டோடும் பிற கலாச்சார அம்சங்களாகும். இவ் அம்சங்களிற் கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள், இரும்பாயுதங்கள்,பிற வெண்கலப் பொருட்கள், அணிகலன்கள்ஆகியன அடக்கினதும் இக்கலாச்சாரத்திற்குத் தனித்துவத்தினை அளிப்பனவாக மக்கள் குடியிருப்புக்கள், ஈமச்சின்னங்கள், குளங்கள், வயல்கள், ஆகியன விளங்குகின்றன. இத்தகைய ஓர் அமைப்பினையே தென்னிந்திய பெருங்கற்கால கலாச்சாரத்திலும் காண்பதால் அக்கலாச்சாரத்தின் படர்ச்சியே ஈழத்துப் பெருங்கற்காலம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது. இப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், அவர்கள் அமைத்த ஈமச்சின்னங்கள், சவ அடக்கங்கள்,வயல்கள்,குளங்கள், ஆகிய இந்த நான்கு அமச்சங்களும் இப்பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கின. இலங்கையில் வரலாற்று உதய காலம் கி.மு.1000 இற்கும் கி.மு. 300ற்கும் இடையில் நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் தோற்றம் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கின. வருகையே காரணமாக அமைந்த தென்பறைத் தொல்லியனாளர் பலர் ஏற்றுள்ளனர். இப்பண்பாடு பெருங்கற்காலப் பண்பாடு எனவும் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.காரணம் இப்பண்பாடு மக்கள் இறந்தோரை அடக்கம் செய்ய ஈமச் சின்னங்களுக்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தியமையும் இரும்பின் உபயோகத்தை தமது அன்றாட வாழ்க்கையால் பெருமளவு பயன்படுத்தியமையாகும். இலங்கையில் இப்பண்பாடு பற்றிய சம்ப கால ஆய்வுகள் சிங்கள மக்களின் மூதாதையரை விட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வழித் தோன்றள்கள் என்ற கருத்தை முற்றாக நிகாரிக்கின்றது. விஐயன் இலங்கைத்தீவில் குடியேறியதற்கு அவன் வழிவந்தவர்கள் நாகரீகம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கோ எதுவித தொல்லியற் சான்றுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு மாறாக தென்னிந்திய பெருங்காலப் பண்பாட்டின் வருகையோடு இலங்கை நாகரீகம் தோற்றம் பெற்றதற்கான சான்றுகள் கண்டுப்பிடிக்கப்பட்;டுள்ளன. தென்னிந்தியாவிலே கி.பி. 1000 ஆண்டளவில் தோன்றிய இப்பண்பாடு எவ்வாறு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனப் பல்வேறு பண்பாடுகளைத் தோற்றுவிக்கக் காரணமாhக இருந்ததோ அதேபோல் இலங்கையிலும் தமிழ்ப் பண்பாடு தோன்றுவதற்கு இப்பண்பாடே காரணமாக இருக்கின்றது. மானிடவியல் ரீதியில் பெருங்கற்கால மக்களும் தென்னிந்தியத் திராவிடப் பெருங்காலப் பண்பாட்டு மக்களும் ஒரே இன வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மானிடவியாலாளரின் கருத்தாகும். பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய சான்றுகள் தென்னாசியாவிலே பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும் அது திராவிட மொழி பேசும் பிராந்தியமான தென்னிந்தியாவிலே தான் செறிந்து காணப்படுவதோடு சில தனித்துவமான அம்சங்கனையும் கொண்டு விளங்குகிறது. இப்பண்பாட்டிற்குரிய ஈமச்சின்னங்களின் வகையான முதுமக்கள் தாழிகள்,கல்லறைகள், கற்கிடைகள் போன்றன விளங்குகின்றன. தென்தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் புதை குழியும் தாழி அடக்க முறையுமே பெருமளவு பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஈமச் சின்னங்களைக் கொண்டே இப் பண்பாட்டுப் பெயரைப் பெற்றாலும் அச்சின்னங்களை விட முக்கியத்துவம் வாய்ந்த பல பண்பாட்டு அம்சங்களையும் இப்பண்பாடு குறித்து நிற்கிறது. தென்னிந்தியாவின் இரும்பின் அறிமுகம், நீர்பாசனத்துடன் கூடிய பயிர்ச்செய்கை, மட்பாண்ட உபயோகம், கட்டமைப்புடைய சமூகத்தோற்றம், அரச அமைப்பு, என்பன இப்பண்பாட்டுடன் தோற்றம் பெறுகின்றன. சங்க காலத்திலே சிறப்புற்றிருந்த சேர, சோழ, பாண்டிய அரசுகள் இப்பண்பாட்டின் பின்னணியிலே தோன்றியனவாகும். இப்பெருங்கற்காலப் பண்பாட்டின் முதி;ர்ச்சி நிலையே தமிழ் மொழி சங்க இலக்கியங்கள் படைக்கப்படும் அளவிற்கு வளர்ச்சி அடையவழி வகுத்தது. இத்தகைய ஒரு பண்பாடே கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் இலங்கையிலும் பரவி நீர்ப்பாசன நாகரிகத்தை மையமாகக்கொண்ட நகரங்களும் அரசுகளும் தோற்றம் பெறக் காரணம் என்பதை நாட்டின் முக்கிய பண்பாட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இலங்கையில் இப்பண்பாடுகள் நிலவியதற்கான சான்றுகள் அநுராதபுரம், கதிரவெளி,பொப்பரிப்பு,வவுநியா,திசமகாறம,மாந்தை,கேகாலை ,கந்கரோடை, ஆனைக்கோட்டை, காரைநகர், வேலனை, பூநகரி போன்ற இடங்களிலும் இப்பண்பாட்டிற்குரிய சின்னங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் குறுனிக் கற்காலப் பண்பாட்டிற்குரிய சான்றுகளும் கிடைக்கப் பெற்றதனால் இப்பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதெனக் கூறலாம். இவற்றின் ஊடாக ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் திராவிடரே என்பது புலனாகிறது. இன்றைய சிங்கள, தமிழ் மொழி பேசுவோர் அவர்களின் சந்ததியினரே என்பதும் உறுதியாகின்றது. இத்துடன் இவ்விரு மொழி பேசுவோருக்கிடையில் ஏற்பட்ட கலாச்சார வேறுபாடு ஈழத்தின் வரலாற்றுக் கோலத்தில் பௌத்த மதத்தின் வருகையோடுதான் ஏற்பட்டது எனலாம். இங்குள்ள அதாவது பெருங்கற்காலப் பண்பாட்டின் தமிழ் மக்களினதும்,சிங்கள மக்களினதும் மூதாதையர் திராவி மொழிகளே பேசினர். இலங்கைத் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு வரலாறு பெருங்கற் காலத்திலிருந்து தனித்துவமான முறையில் தோன்றிவளர்ந்த கிளைவழக்கு என கூறலாம். இன்று தமிழ் மக்களுடையே உள்;ள சமூக பண்பாட்டு பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், மரபுகள், கிரியை முறைகள் என்பவற்றை வரலாற்றை பின் நோக்கிப்பார்த்தால் அவற்றின் தொடக்கமாக பெரும் பாலும் பெருங்கற் காலப்பண்பாடே விளங்குகின்றது. பெருங்கற்கால சமுகத்தின் தொடர்பு சாதன ஊடகமாக பல வித குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்பதை இலங்கை தென்னிந்திய பெருங்கற்கால மட்பாண்டங்களின் அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் சிந்து வெளி நாகரிக காலத்தில் இருந்து பயன்படுத்தப் பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது தென்னிந்திய பெருங்கற்கால மட்பாண்ட குறியீடுகள். சிந்துவெளி நாகரிகத்தில் பின்பற்றிய போதிலும் அந்நாகரிகத்தின் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் பின்பற்றப்பட்ட பண்பாடுகள் மறையவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. பூநகரிப் பகுதியால் எடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் 72 வகையான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டு அவை பெருப்பாலும் தென்னிந்திய மட்பாண்டகுறியீடுகளை ஒத்தவையாக உள்ளன. பொதுவாக பெருங்கற்கால மட்பாண்டங்களில் வரும் எழுத்துக்கள் சமய சின்னங்களாக, குலசின்னங்களாக, வணிக சின்னங்களாக எழுத்துக்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்று இதன் எச்ச சொச்சங்கள் காணப்படுகின்றன. சலவைத்தொழில் ஆடைகளிற்கு குறியீடு போடுதல் மாடுகளிற்கு குறியிடுதல் போன்றவற்றை சொல்லலாம். பூநகரியில் கிடைத்த மண்பாண்டங்களிள் பொறிக்கப்பட்ட எழுத்துகள் தமிழ் பாரம்பாரிய வடிவத்தை ஒத்து நிக்கின்றது. இது இற்றைக்கு 2000ம் ஆண்டுக்கு முன் தமிழ் மக்கள் வாழ்ந்ததை எடுத்து சொல்கின்றது. இவ் வரிவடிவங்கள் சங்ககாலத்தை போல திராவிட பெருங்கற்கால பண்பாட்டை வழிவகுத்த மக்களே தமிழ் மொழியை பேசினார் என்பதை உறுதி படுத்துவதாக உள்ளது

No comments: