Monday, November 20, 2006

கதிரமலை அரசும் சிங்கை நகர் அரசும்

கதிரமலை அரசு கி.பி 1ம் நூற்றாண்டில்; இருந்து கி.பி 9ம் நூற்றாண்டு வரை நீடித்துள்ளது கந்தரோடை எனப்படும் கதிரமலையே ஈழமண்டல ஆட்சியாளர்களின் தலைநகரமாக உள்ளது. இவ் அரசை தென்னிலங்கை பௌத்த ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் படை எடுத்துத் தமது ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். இது கி.பி 8ம் நூற்றாண்டு வரை அடிக்கடி ஆட்சிக்குட்படுத்தப்பட்டது. இந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த இந்நகரை ஆட்சி செய்த 2ம் மகிந்த மன்னனுக்கு எதிராக (777-797) உத்தர தேசத்து முதலிகள் கிளர்ச்சி செய்தனர.; இக்கிளர்ச்சிக்குக் கலிங்க தேசத்தவனான உத்தரசிங்கனே தலைமை தாங்கினான். நெடுங்காலமாக இழந்திருந்த உரிமையை மீட்கும் வகையில், போரிட்டு நாகதீபத்தை உத்தரசிங்கன் பெற்றுக்கொண்டான். இந்த நிகழ்வு கி.பி 785 இல் ஆகும். வெற்றி கொண்ட உத்தரசிங்கன் கதிரமலையை தலைநகராகக் கொண்டு, உத்தர தேசத்தை ஆண்டு வந்தான். கந்தரோடைப் பிரதேசம் பௌத்தத்தின் செல்வாக்கினால் பௌத்த மக்களது முக்கிய பிரதேசமாக மாறியிருந்தது. பௌத்தம் நாகதீபத்தில் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து விடுவித்தான். நகுலேஸ்வரர் கோயில்,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களை உத்திரசிங்கனின் மனைவி மாருதப்புரவீகவல்லி கட்டுவித்தார். யாழ்ப்பாண இராட்சியத்தில் சைவம் இழிவு நிலையிலிருப்பதைக் கண்டு புத்தூக்கம் அளிக்க விரும்பிக் காசிப் பிராமணர்கள், பெரியமனத்தூளார் என்ற அந்தணர் என்பவர்களை வருவித்துள்ளான். இந்தியாவிலிருந்து சில விக்கிரகங்களை எடுத்து வரப்பட்டு இந்துக் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விக்கிரகங்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் பௌத்தம் கதிரமலை, வல்லிபுரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. அதாவது நாகதீபத்தின் மேற்குப் பகுதி கிழக்குப் பகுதி என்பன வேற்றுமத ஆதிக்கத்திலிருக்கத் தென்பகுpதி (யாழ்ப்பாணம்) மக்கள் விரும்பிக் குடியேறியிராத பிரதேசமாக விளங்கியது. இத்தகைய நிலையில் தனது தலைநகரை இடம் மாற்றுவதற்கு உத்திரசிங்கன் விரும்பினான். இதனையே சைவம் சிறப்புறக்கூடிய புதியதொரு பிரதேசத்தை அவன் செய்ய விரும்பினான். இதன் விளைவே சிங்கநகர் உதயமானது. உத்திரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராட்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்திற்கு திடீர் வி ஜயம் ஒன்றினை மேற்கொண்டான.; அவன் வன்னி மார்க்கமாகச் செல்கையில், வன்னியர்கள் ஏழு பேரும் எதிர்கொண்டு வந்த வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். அதற்கு உத்திரசிங்கன் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்டதே தலைநகர் சிங்கநகர் ஆகும். தமிழரசின் ஆரம்பத் தலைநகரான சிங்கநகர் என்பது யாழ்ப்பாணத்திற்கு வெளியே வன்னிப் பிராந்தியத்தில் குறிப்பாக பூநகரியில் இருந்ததெனக் கூறமுடியும். வல்லிபுரப் பகுதியிலேயே சிங்கைநகர் இருந்ததெனவும், நல்லூருக்கு அருகில் இருந்ததெனவும், வரலாற்றாசிரியர்கள் கொள்வது ஏற்றதாகவில்லை. சிங்கநகரை உத்திரசிங்கன் பகுதியிலேயே நிறுவினான், என்பது பொருத்தமானது. ஜீ.புஸ்பரட்ணத்தின் ஆய்வுகளிலிருந்து பூநகரிப் பிரதேசம் பண்டைய இராட்சியம் ஒன்றின் தளமான பிரதேசமாக விளங்கியிருக்கின்றது எனத் தெரிகிறது. பூநகரிப் பிரதேசத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் இதனை நிரூபிக்கின்றன. கி.பி.10ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி.1003 இல் இராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்றும் 11ஆம் நூற்றாண்டின் பின் முற்பகுதியில் சோழர் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் நிலவியதாகச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சோழரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் நிர்வகித்து வந்தார்கள். இச்சோழ மன்னனின் பிரதிநதியாக புவனேகவாகு சிங்கைநகரி;ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளான். 13ஆம் நூ ற்றாண்டின் நடுப் பகுதி வரை சிங்கைநகர் வட இலங்கையின் தலைநகராகவும், இந்த அரசு சோழரின் ஆதிக்கத்தினுள்ளும் இருந்தது. உத்திரசிங்க மன்னன் கதிரமலையிலிருந்து தனது தலைநகரைப் பு +நகரிக்கு மாற்றிக் கொண்டான். யாழ்ப்பாணக் குடா நாட்டில் பௌத்தமும் சிங்களவரும் ஆதிக்கம் பெற்றதால் இந்தத் தலைநகர் இடம் மாற்றம் நிகழ்ந்தது. மீண்டும் 13ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை மாறியது. நாகதீவிலிருந்து சிங்களவர்கள் தென் புலம் பெயர்ந்தனர். கலிங்கத்து (மாகன்) மீண்டும் உத்தரதேச மன்னனாகச் சிங் கை நகரில் முடிசூடிக்கொண்ட செய்தி, எஞ்சிய பௌத்த சிங்களவரையும் இடம் பெயரச் செய்துள்ளது, எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: