Monday, November 20, 2006

லெமூரியா அல்லது குமரிக்கண்டம் அல்லது கண்டுவானா

Photobucket - Video and Image Hosting
கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இன்று கடல்ப் பரப்பாக இருக்கின்ற இந்து சமுத்திரம் நீர் மூடாத நிலப்பரப்பாக பரந்து விரிந்து கிடந்தது.இன்று இந்தியத் துணைக்கண்டம், அவுஸ்ரேலியா கண்டம் ,ஆபிரிக்காக் கண்டம் என்பன அன்று ஒன்று சேர்ந்த நிலப்பரப்பாக இருந்தன. இந்த நிலப்பரப்பு கடற்கோள் ஒன்றின் தாக்கத்தினால் சிதறப்பட்டு இன்று இந்தியாகவும் அவுஸ்ரேலியாக் கண்டமாகவும், ஆபிரிக்கக் கண்டமாகவும் விரிந்து சென்றன. லெமூரியாக் கண்டத்தின் ஒருபகுதி இந்து சமுத்திரத்தின் கீழ் மூழ்கிப் போய் உள்ளது. இன்று இந்து சமுத்திரத்தினுள் மூழ்கிப் போயுள்ள நிலப்பரப்பு என்பதைச் செய்மதிப் படங்களும் ,பண்டைத் தமிழ்ப் பட்டினமான பூம்புகார்ப் பட்டினம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின௼br />?றமையும் சான்றுபகருகின்றன.கண்ட நகர்வுக் கொள்கையின் அடிப்படையில் லெமூரியாக் கண்டம் கடல்கோளினால் தாக்கப்பட்டு எஞ்சியிருந்த நிலப்பரப்பு குறிப்பிட்ட காலத்திற்கு(கோடான கோடி ஆண்டுகளின் பின்னர்) படிப்படியாக நகர்ந்து இன்று இந்தியா, அவுஸ்ரேலியா, ஆபிரிக்காவாக இன்று தோன்றுகின்றது.இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களின் கரையோரங்களில் காணப்படும் மண்ணின் தன்மை, உயிரினங்கள், மற்றும் கனியவளங்கள் இவற்றிக்கிடையிலான ஒற்றுமை முன்னர் சேர்ந்திருந்தமையை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன. இங்கே தான் உயிரினங்கள் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் நடந்த கூர்ப்பினால்(படிமுறை வளர்ச்சி) முதல் மாந்தவினம் (மனிதன்) தோன்றியதென்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வாளர்கள் தமிழரின் இலக்கியங்கள்,பண்பாடு,புதைபொருள்களின் பழைய கற்காலச் சான்றுகள் என்பனவற்றை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்னர். அவுஸ்ரேலியாவின் சொந்தக்காரரான அபோரியன்ஸ் மக்களுக்கும் ஆபிரிக்காவின் நீக்கிரோ மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான பண்பாடு கலாச்சராங்கள் பல ஒத்தனவாகக் காணப்படுகின்றன. உலக நாகரிகம் கறுப்பர்களிடம் இருந்துதான் பிறந்தது.எனவே கறுப்பர்கள் எனப்படும் நாம் பெருமைப்பட வேண்டும்.ரஸ்சியாவின் மூன்று முக்கிய பல்கலைக் கழகங்கள் சேர்ந்து ஆராய்ச்சிகளின் முடிவாக ரஸ்சியாவின் தலைநகர் மொஸ்கோவில் ஏ.கோபிநாத்தோவ் என்ற அறிஞர் ஆராச்சிகளின் அடிப்படையில் உலகின் ஆதிமனிதன் தமிழனே என்ற கருத்தை முதல்முதலாக முன்வைத்தார். உலகின் ஆதிமனிதன் தமிழனே என்று சரித்திரவியல், பூகர்ப்பவியல், ஆதிமனிதவியல், கடலியல், உயிரினவியல், புவியியல்,மொழியியல் என்பனவற்றை வைத்து முடிவுக்கு வந்துள்ளனர்.
Photobucket - Video and Image Hosting

No comments: