Monday, November 20, 2006

இலங்கையின் கட்சி முறையும் அதன் தோற்றமும்.

இலங்கையில் 1947ம் ஆண்டு பொதுத்தேர்தலை அடிப்படையாக வைத்து பலகட்சிகள் தோற்றம் பெறுகின்றன. 1920ம் ஆண்டளவில் இலங்கையின் தொழிற்சங்க முன்னோடியாகக் காணப்படும் A . E. குணசிங்க என்பவர் தொழிற்கட்சி என்னும் ஓர் அமைப்பை உருவாக்கினார். என்றாலும் அது ஒரு பரந்த கட்சியாகக் காணப்படுவதில்லை. வெளிநாடு சென்று படித்துப் பட்டம் பெற்று பொதுவுடமைக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்ட கலாநிதி .S .A. விக்கிரமசிங்க , கலாநிதி . N .M. பெரேரா , கலாநிதி . கொல்வின் R. D. பிலிப். குணவர்த்தனா போன்றோர் ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாக வைத்து 1935ம் ஆண்டளவில் இலங்கைச் சமசமாஜக் கட்சி என முதலாவது கட்சியினை ஆரம்பித்தனர். இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து வந்த பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு 1946ம் ஆண்டு D.S. சேனநாயக்கா ஜக்கிய தேசியக் கட்சியை ஆரம்பிக்கின்றார். இக்கட்சியோடு சிங்கள மகாசபை, முஸ்லீம் லீக் என்ற இரு அமைப்புக்களும் சேர்ந்து கொள்கின்றன. சிங்கள மகாசபை என்பது சிங்களக் கலாசாரங்களையும் புத்தமதப் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்காக 1937ம் ஆண்டு S. W . R. D. பண்டாரநாயக்கா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதுபோலவே 1944ம் ஆண்டு G. G. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ( A. C. T. C ) எனும் கட்சியை ஆரம்பித்தார். 1947ம் ஆண்டுத் தேர்தலில் ஜ .தே. கட்சி 42 , இ. ச. ச. கட்சி (L. S .S. P ) 10, தமிழ் காங்கிரஸ் 7, இலங்கை இந்தியக் காங்கிரஸ் 6, ஏனைய இரண்டு பொதுவுடமைக் கட்சிகள் 8, எனஆசனங்களைப் பெற்றன. இவ்வாறாகத் தேர்தலில் போட்டியாவதற்காக இக்கட்சிகள் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் இம் மூன்று கட்சிகளிலும் இருந்து பல்வேறு கட்சிகள் பிரிந்து தொடங்கப்பட்டன. இலங்கை சமசமாஜக்கட்சியிலிருந்து பிலிப்குணவர்த்ததன 1950களில் பிரிந்து ( V.L.S.S.P ) என்றொரு கட்சியை ஆரம்பிக்கின்றார். அது போலவே எட்மன்ட் சமரக்கொடி என்பவர் 1960களில் ( L. S. S. R ( R )என்னும் கட்சியைத் தொடங்கினார். S. A. விக்கிரமசிங்க என்பவர் இரண்டாம் உலகப்போரின் சமசமாஜசக் கட்சியோடு ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இலங்கை கொம்யூனிஸ் கட்சி (U. P)என்பதனை ஆரம்பித்தார். இக் கட்சி சோவியத் யூனியனுக்குச் சார்பான கட்சி. பின்னர் இக்கட்சியிலிருந்தும் 1960களில் N.சண்முகதாசன் என்பவர் பிரிந்து சீனச் சார்பான இலங்கைப் பொதுவுடமைக்கட்சியை ஆரம்பிக்கிறார். பின்னர் இதிலிருந்து றோகன விஜயவீர அதிதீவிரமான போக்குள்ள J.V.P. எனப்படும் மக்கள் விடுதலை முன்னனியை ஆரம்பிக்கின்றார். ஜ. தே. க. யின் 1வது அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பண்டாரநாயக்க 1951ம் ஆண்டு ஜ. தே. க. வின் போக்குப் பிடிக்காமல் அதிலிருந்து பிரிந்து ( S . L. R. P )சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பதனை ஆரம்பிக்கிறார். 1944ம் ஆண்டு தோன்றிய தமிழ் காங்கிரஸ் கட்சி ஜ.தே க. வின் ஆட்சியோடு கூட்டுச் சேர்ந்து மலையக மக்களை நாடற்ரவராக அவர்களது குடியுரிமையைப் பறித்த கட்டத்திற்கு ஆதரவு கொடுத்த பொழுது S. J. V செல்வநாயகம் , வன்னியசிங்கம், ( கோப்பாய் கோமகன்) நாகநாதன் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சியை (சமஸ்டிக் கட்சி) தொடங்கினார்கள். பின்னர் இதிலிருந்து தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை ஊர்காவற்துறை நவரத்தினம் ஆரம்பித்தார்

No comments: